ஒடிசாவில் பலத்த மழை, நிலச்சரிவு அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை..!
Meteorological Department warns of landslide risk in Odisha
மோந்தா புயல் காரணமாக ஒடிசாவின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து புவனேஸ்வரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி தெரிவித்துள்ளதாவது:
அக்டாபர் 28-ஆம் தேதி காலைக்குள் மோந்தா புயல் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கிறதாகவும், அன்றைய தினம் மாலை அல்லது இரவில் காக்கிநாடாவை சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புயல் கரையை கடக்கும் தருணத்தின் போது, மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளிக்காற்று வீசும். இந்த காற்று அதி தீவிரமாக வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன் காரணமாக அடுத்த 02 அல்லது 03 நாட்களுக்கு ஒடிசாவில் பலத்த மழை பெய்யும் எனவும், பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Meteorological Department warns of landslide risk in Odisha