பலத்த காற்றின் எதிரொலி: சூலூர் அருகே தீப்பற்றி எரிந்த காற்றாலை இயந்திரம்..!
Wind turbine caught fire near Sulur due to strong winds
தமிழக்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசுகிறது. இதன்படி, இன்று காலை சூலூர் அருகே வீசிய பலத்த காற்று காரணமாக காற்றாலை இயந்திரம் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் இந்தப்பகுதியில் காற்றாலை அமைத்துள்ளது. அதன் மூலம் மின்சாரம் தயாரித்து அரசுக்கு வழங்கி வருகிறது. அதன்படி, கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காற்றாலை மின்சார தயாரிக்கும் இயந்திரம் இயங்கி வருகிறது.
சூலூர் பகுதியில் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளதால் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் காற்றாடிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக போதிய பராமரிப்பு இல்லாத காற்றாடிகள் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாக செலக்கரச்சல் பகுதியில் காற்றாலை இயந்திரம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் காற்றாலை இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Wind turbine caught fire near Sulur due to strong winds