'தக் லைப்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதி வெளியீடு..!
Thug Life trailer and audio launch date announced
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 05-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 17-ந் தேதி மாலை 05 மணிக்கு வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது. இந்தவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி நிகழ்ச்சிகள் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thug Life trailer and audio launch date announced