வீட்டில் இருந்து வேலை..பல கோடி ரூபாய் சுருட்டிய 12 பேர் கைது!
Work from home12 people arrested for embezzling several crore rupees
வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு வழங்குவதாக கூறி பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் இருதப் படியே வேலையை முடித்து கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று பெங்களூரு எல்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த வாலிபரின் வாட்ஸ்-அப்பிற்கு குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் லிங்க் உள்ளே சென்று அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்தார். இதையடுத்து ஆன்லைன் மூலம் வேலை வழங்கப்பட்டது.
பின்னர் அந்த வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், நீங்கள் வேலை செய்ததற்கான சம்பளம் ரூ.10.80 லட்சம் தங்களிடம் உள்ளதாகவும், அதை பெற்றுக்கொள்ள ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனை நம்பிய அந்த வாலிபர் ரூ.5 லட்சம் செலுத்தினார். ஆனால் மேலும் அந்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸ் விசாரணையில் இறங்கினர் , அப்போது விசாரணையில் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு தருவதாக கூறி பலரின் வங்கி கணக்குகள், ஏ.டி.எம். கார்டு, வாங்கி கொண்டு பண விவரத்தை தெரிந்து கொண்டு, அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக பெங்களூரு, மும்பையில் ஒருவரையும், உத்தரபிரதேசத்தில் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 400 சிம்கார்டுகள், 140 ஏ.டி.எம். கார்டுகள், 17 காசோலை புத்தகங்கள், 27 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
English Summary
Work from home12 people arrested for embezzling several crore rupees