ஜெயிக்கப்போவது யாரு? ரத்தம் தெறிக்கும் சூதாட்ட பின்னணியில் ‘ஐ அம் கேம்’...! - ரிலீஸ் குறித்த அதிரடி அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்று வரும் நடிகர் துல்கர் சல்மான், தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான அவரது ‘காந்தா’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று பேசுபொருளாக மாறியது.இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஐ அம் கேம்’.

இந்த திரைப்படம், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள 40-வது படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.

சூதாட்ட உலகின் மர்மங்களையும், அதிரடியான திருப்பங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், தமிழ் திரையுலகின் தனித்துவமான படைப்பாளரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கதிர், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா உள்ளிட்டோர் கதையின் முக்கிய தூண்களாக களமிறங்கியுள்ளனர்.

கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார்.படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல சண்டை அமைப்பாளர்களான அன்பறிவு வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 11 மாதங்கள் நீடித்த படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்துள்ளது.முதலில் கோடை வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம், தற்போது வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who will win I Am Game set against backdrop blood splattered gambling Action update release


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->