உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம் எது.?! ருத்ராட்ச முகங்களின் சிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. ருத்ராட்சத்தை பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. ருத்ராட்சத்தில் ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.

ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்) மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியது. மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது.

இரு முக ருத்ராட்சம் சிவன் சக்தி இணைந்த ருத்ராட்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது.

வாழ்வில் இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்து விலகி தூய்மை நிலை அடைய உதவுகிறது மூன்று முக ருத்ராட்சம்.

நான்கு முக ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு புத்திக்கூர்மை, திறமை, சாதுர்யத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலை இருக்கும்.

ஐந்து முக ருத்ராட்சம் அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும்.

அறிவு மேம்படவும், தலைமைப் பண்பைப் பெறவும் ஆறு முகம் ருத்ராட்சத்தை அணியலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is Good Rudratcham For specific zodiacs


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->