பிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா?! ஹோட்டலில் அலறியடித்து ஓட்டம்!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. 

இந்த சீசனில் போட்டியாளர்களாக, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி,  ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். 

முதல் ஆளாக நடிகை ரேகா வெளியேறிய நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த நிலையில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தனிமைப் படுத்தப்பட்டுள்ள சுசித்ரா தங்கியுள்ள தனியார் ஹோட்டலில் அவரை கொலை செய்ய முயற்சிப்பதாக ஒரு பரபரப்பான செய்தி வைரலாகி வருகிறது. பாடகி சுசித்ரா தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில், யாரோ அவரை கொலை செய்ய வருவதாகவும், அதனால் கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு பதறியடுத்து ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மையை சுசித்ராவே சொன்னால்தான் தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viral news about Suchithra


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->