15 நிமிட உரையாடலா? ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜய்! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல திரை பிரபலங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

விஜய் நடிப்பில் மட்டுமல்லாமல் மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிக்கு இணையாக பொதுமக்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்து வந்தார். 

இதற்கிடையே நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி அதற்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு என தெரிவித்திருந்தார். 

அது மட்டுமல்லாமல் தனது 69 வது திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி கேட்டதற்கு ''வாழ்த்துக்கள்'' என்ற ஒரு வரியில் மகிழ்ச்சியுடன் பதில் அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினியை தொலைபேசி மூலம் அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் இருவரும் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் நடிகர் ரஜினி அரசியல் குறித்த அறிவுரைகளை விஜய்க்கு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay thanked Rajini


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->