விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த அனுஷ்கா.! படக்குழு வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

 இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸஎன பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் விஜய் சேதுபதி-அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய திரைப்படங்களில் நடிகை அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi and Anushka in new movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->