நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி.! நாடக கலைஞர்களுடன் கலக்கல்.!
Vijay Antony dance In public
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்தான் விஜய் ஆண்டனி. இவர் டிஷ்யூம் திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.ஆனால் அந்தப் படத்தில் அவர் இசையமைக்கவில்லை.
அவரது இசையமைப்பில் சுக்கிரன் திரைப்படம் தான் முதலில் வெளிவந்தது இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னட படங்களிலும் இசையமைத்து வருகிறார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் விஜய் ஆண்டனி கலந்து கொள்வார். கடந்த 2016 இல் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அண்ணாதுரை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இத்தகைய சூழலில் சமூக வலைதளங்களில் ஆட்டி வாக இருக்கும் விஜய் ஆண்டனியின் நடன வீடீயோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.
புதுச்சேரி மாநிலத்தில் சங்கரதாஸ் சாமிகளின் நூறாவது நாள் நினைவு நாளை முன்னிட்டு நாடக கலைஞர்களின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் நாடக கலைஞர்களின் இசைக்கு அவர்களுடன் சேர்ந்து ஊர்வலத்தில் நடனம் ஆடினார். இது குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
Vijay Antony dance In public