#AK62 : நடிகர் அஜித்தின் படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ‌.

இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. 

இந்த நிலையில் சமீப நாட்களாக அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் இருந்த #AK62 என்ற பதிவை நீக்கியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் 62வது படத்தை  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து நடிகர் அஜித் குமாரின்  62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, இயக்குனர் மகிழ் திருமேனி அல்லது விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Shivan left Ajith Kumar 62 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->