நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நாள் குறித்த அறிவிப்பு.! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் சமீபகால ஹாட் காதல் ஜோடிகள் என்றால் அது விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லாமல், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். எப்பொழுதும் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளை பார்க்கும் இணையதளப் வாசிகள் பலரும் சிங்கிள் சாபம் உங்கள சும்மா விடாது என்று செல்லமாக கோபித்துக் கொள்வது வழக்கம். 

அந்த அளவிற்கு இந்த ஜோடியின் லூட்டிகள் அதிகமாக இருக்கும். இருப்பினும், இவர்கள் திருமணம் குறித்த தகவல்களை வெளியிடாமல் கமுக்கமாக இருக்கின்றனர். மேலும், கோலிவுட்டில் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் கிசுகிசுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜோசியர் ஒருவர் நயன்தாராவிற்கு திருமண தோஷம் இருப்பதாக கூறி அவரை காளகஸ்தி கோவிலுக்கு சென்று வழிபட அறிவுரை வழங்கியுள்ளார். இதன் காரணமாகவே, நயன்தாரா கடந்த சில மாதங்களாக தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு வழிபாட்டிற்கு சென்று வந்தார். 

இதற்கிடையில், கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஜோசியர் கூறிய கோவில்களில் ஒன்றான கும்பகோணம் அருகே இருக்கும் திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானை மணக்கோலத்தில் வேண்டி பிரார்த்திக்க கூறியிருக்கின்றார். அங்கே சென்று வந்தால் நயன்தாராவிற்கு திருமண தடை அகலும் என்றும், எனவே அங்கே சென்று வந்ததும் திருமணத்தை செய்து கொள்ளுங்கள் என்றும், ஜோதிடர் அறிவுறுத்தி இருக்கிறார். ஊரடங்கு தளர்ந்த உடன் அங்கு சென்று வந்த பிறகு இந்த ஜோடி திருமணம் செய்ய இருக்கின்றனராம். அந்த ஜோதிடர் கூறியபடி நயன்தாரா திரையுலகில் வளர்ந்துவிட்டார். என்னதான் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்து கோவில்கள், ஜோதிடம் மற்றும் அந்த ஜோதிடர் மீது அலாதி ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vignesh nayanthara marriage update 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->