சூரியின் வாழ்வில்.. சூரியனாய் வந்த விடுதலை படம்.. 10 நாளில் இவ்வளவு வசூலா.?! - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த  விடுதலை என்ற திரைப்படம் கடந்த மாதம் 31ம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்திற்கு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நகைச்சுவை நடிகரான சூரியின் முதல் முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படம் வெளியாகி 10 நாட்கள்  முடிவடைந்த நிலையில் திரைப்படத்தின் 10 நாள் வசூல் பற்றிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி விடுதலை திரைப்படம் முதல் 10 நாட்களில் 39 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. மேலும் இன்னும் சில நாட்களில் 50 கோடியை அசால்ட்டாக  தொட்டுவிடும் என கணித்திருக்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இரண்டாவது பாகத்தில் இன்னும் பத்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருப்பதால் அது முடிந்த பின்னர் விடுதலைப் பார்ட் 2 க்கான தேதி அறிவிக்கப்படும் என வெற்றிமாறன் அறிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viduthalai movie first 10 days collection report


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->