அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவேன்.. வாத்தி பட இயக்குனர் சர்ச்சை கருத்து.!
Venky Athluri speech about reservation
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி சமித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெளியான வாத்தி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி சமீபத்தில் அளித்த பேட்டியில், பேட்டி அளித்த போது, அவரிடம், நீங்கள் அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்? அதற்கு பதிலளித்த அவர், இப்போது இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது எனவும், பொருளாதாரா ரீதியிலான இட ஒதுக்கீட்டை மட்டும் நடைமுறைப்படுத்துவேன் எனவும் அவர் கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Venky Athluri speech about reservation