இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சை கருத்து.. அந்தர்பல்டி அடித்த வாத்தி பட இயக்குனர்.!
Vathi movie director speech about reservation
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி சமித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி சமீபத்தில் அளித்த பேட்டியில், பேட்டி அளித்த போது, அவரிடம், நீங்கள் அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்? அதற்கு பதிலளித்த அவர், சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது எனவும், பொருளாதாரா ரீதியிலான இட ஒதுக்கீட்டை மட்டும் நடைமுறைப்படுத்துவேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று வாத்தி படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீடு சூழல் பற்றி எனக்கு தெரியாது. இட ஒதுக்கீடு குறித்து நான் ஏற்கனவே சொன்ன கருத்து இங்கு சர்ச்சையாகி உள்ளது.
எனவே நான் இட ஒதுக்கீடு குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்னுடைய விருப்பம். அது தான் நாட்டின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி, என்னுடைய நோக்கமும் அது தான் என தெரிவித்துள்ளார்.
English Summary
Vathi movie director speech about reservation