நயன் - திரிஷா ஒப்பீடு.. நச்சென திரிஷா கொடுத்த ஒற்றை பதில்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஜோடி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை திரிஷா. அதன்பின் அஜித், விஜய், ரஜினி, தனுஷ், கமல், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் அவர் சேர்ந்து நடித்து வருகின்றார்.

இதுவரை 20 வருடங்களை நிறைவு செய்த திரிஷா சமீபத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பின் அவரது நடிப்பில் ராங்கி படம் வெளியாக உள்ளது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது தன்னுடன் நயன்தாராவை ஒப்பிடுவது குறித்து அவர் பேசினார்.

அதில், "இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். நாங்கள் இருவரும் ஒரே கட்டத்தில் தான் சினிமா வாழ்வில் அடி எடுத்து வைத்தோம். இருவருமே முன்னனி நடிகர்களுடன் நடித்திருக்கிறோம். இது பாசிட்டிவான முறையில் ஒப்பீடு செய்யப்படுவதால் எனக்கு மகிழ்ச்சி தான்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதலில் சமந்தா கேரக்டரில் நடிக்க என்னை தான் விக்னேஷ் சிவன் அழைத்தார். ஆனால், எனக்கு வேறு சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், வருத்தம் எல்லாம் இல்லை." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha about Compare To nayanthara


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->