ஏகே 62 திரைப்படத்தின் கதை இதுதான்.. ட்ரெண்டிங் செய்யும் தல ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமாரின் 62 வது திரைப்படத்திற்கான தலைப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பிற்காக அஜித் ரசிகர்கள் கடந்த நான்கு மாதமாக தவம் இருந்தனர். அந்தத் திரைப்படத்திற்கான அனைத்து சிக்கல்களும் நீங்கி ஒரு வழியாக அஜித் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி லைக்கா நிறுவனம் படத்திற்கான தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஏகே 62 திரைப்படத்திற்கு 'விடா முயற்சி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் வெளியாகி வெற்றி பெற்றது போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் போஸ்டரை டி கோட் செய்து அதில் படக் குழு ஏதேனும் கதை பற்றிய தகவல்கள்  வைத்திருக்கிறதா என தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது இந்த திரைப்படத்தினைப் பற்றிய புதிய செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

அந்த செய்தியின் படி விடாமுயற்சி திரைப்படத்தின் போஸ்டரில் ற்  என்ற எழுத்தில் கூகுள் சிம்பல் இருப்பதால் இந்தத் திரைப்படம் நிச்சயம் பயணங்களை பற்றிய கதை தான் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பயணங்களைப் பற்றிய கதை என்பதால் நிச்சயமாக அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் எனவும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் எழுதி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் தல ரசிகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the story of AK 62 movie which is trending on social media


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->