பொன்னியின் செல்வன் 2  படத்தின் முதல் நாள் வசூல் - வெளியான பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் 2  படத்தின் முதல் நாள் வசூல் - வெளியான பகீர் தகவல்.!

லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக எடுத்துள்ளார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் 30 கோடி முதல் 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 18 கோடி முதல் 20 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் அரசு உத்தரவையடுத்து காலை 9 மணிக்கே முதல் காட்சி தொடங்கியதால் ஒட்டு மொத்தமாக 3,200 திரைகளில் படம் வெளியிடப்பட்டது. மொத்தப் படமும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirty crores collection of ponniyin selvan 2 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->