சோற்றுக்கே வழியில்லை...ஆஸ்கர் விருதா? நிறவெறி பிடித்தவர்கள்...! - ஏ. ஆர் ரகுமான்
There is no way to get a rice Oscar Racists AR Rahman
திரைப்பட உலகில் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று, புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையமைப்பாளராக, மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார். தற்போது ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' திரைப்படத்தில் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் அவரிடம், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்திய சினிமாக்கள் கையாளப்படும் விதம் பற்றி கேட்கப்பட்டது.
ஏ.ஆர்.ரகுமான்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வரும் படங்கள் என்றாலே, அவற்றை நிறவெறி பார்வையில்தான் பார்ப்பார்கள்.
'இவர்கள் நாட்டில் சோற்றுக்கே வழியில்லை.. கழிவறைகள் இல்லை.. இவர்களெல்லாம் படத்தை எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டார்களா?' என்ற எண்ணம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
அதை மீறி நாம் படம் எடுக்கும்போதுதான், 'எப்படி இதைச் செய்தீர்கள்?' என்ற உணர்வை அவர்களுக்குள் விதைக்க முடியும். அப்படியொரு தருணத்தை ஏற்படுத்தியதுதான் ஆர்.ஆர்.ஆர். படம். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் வழங்கும்போது, நான் அங்குதான் இருந்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
There is no way to get a rice Oscar Racists AR Rahman