லியோ திரைப்படம் ரிலீஸ் எதிரொலி - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


லியோ திரைப்படம் ரிலீஸ் எதிரொலி - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,நடிகர் விஜய் நடிப்பில், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி, சஞ்சய்தத், மிஷ்கின், உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. இந்தப் படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆனால், இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் திரையிட கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகளில் காலை ஒன்பது மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒன்றரை மணிக்குள், இந்தப் படத்தினை திரையிடலாம். வருகிற 19-ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வழக்கமான நான்கு காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி குறித்த நேரத்திற்குள் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் திரையரங்குகளில் படம் திரையிடக்கூடாது.

திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடும் போது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை விதிகள் 1957 மற்றும் தமிழ்நாடு கேளிக்கை வழிச்சட்டம் 1939 விதிகளை விட கூடுதலாக வசூல் செய்தால் சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர்களை 9445000451, 9445000452 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். 

மேலும், 04546-261093 என்ற தொலைபேசி எண், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் அந்தந்த பகுதிகளுக்கான வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டும் புகார் செய்யலாம். சுகாதாரக் குறைபாடு அல்லது கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

theni districts collector sajeevana announce helpline numbers for leo move ticket issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->