செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்... செல்போனை தட்டிவிட்ட ஷாருக்கான்.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதன் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உலகெங்கும் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே,  ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் ஜவான் திரைப்படத்திற்காக மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.

இந்நிலையில் இன்று காலை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஷாருக்கான் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இந்த செயல் ஷாருக்கானுக்கு கோபத்தை வரவழைத்தது.

இதனால் கோபமடைந்த ஷாருகான் அந்த இளைஞரை தள்ளிவிட்டார். அப்போது அவர் கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாகி இருக்கிறது. பொதுவாக ஷாருக்கான் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The superstar knocked out the cell phone of a young man who was trying to take a selfie creating a commotion at the airport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->