ஸ்ரீ வித்யாவின் ஒரு தலை காதல்... கண்டுக்கொள்ளாத உலக நாயகன்... ரகசியத்தை உடைத்த குட்டி பத்மினி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீவித்யா. கர்நாடக இசை பாடகி எம் எல் வசந்தகுமாரியின் மகளான இவர். 1970களில் இருந்து 2000 வரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் உலக நாயகன் கமல்ஹாசனை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக  பரபரப்பான தகவலை வெளியிட்டு இருக்கிறார் முன்னாள் பிரபல நடிகை குட்டி பத்மினி. இது தொடர்பான தகவல்களை தனது சேனலில் பகிர்ந்திருக்கிறார் அவர். குட்டி பத்மினி தனது சேனலில்  முன்னாள் நடிகைகள் பற்றி பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதே போன்று தற்போது மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீவித்யாவின் கண்கள் அவ்வளவு அழகாக இருக்கும் என விமர்சித்த குட்டி பத்மினி ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்றும் அவரது நடிப்பாலும் அழகாலும்  அவரை காதலித்து வந்ததாகவும் தெரிவித்தார். அப்போது  தெலுங்கு படங்களில் கமல்ஹாசனுடன் நடித்துக் கொண்டிருந்தேன் என்றும் அந்த நேரத்தில் கமல்ஹாசன் வாணி கணேஷுடன் காதலில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் ரேகா உள்ளிட்ட பலருடன் அவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஸ்ரீ வித்யாவை சந்தித்து இந்த விஷயங்களை கூறி காதல் எல்லாம் வேண்டாம் என்று அறிவுரை செய்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் ஸ்ரீவித்யா எதையும் காது கொடுத்து கேட்கவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் வாணி கணேசன் கமல்ஹாசனும் திருமணம் செய்து கொண்டதால் ஸ்ரீவித்யா கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும்  தெரிவித்தார். ஜார்ஜ் என்பவர் ஸ்ரீவித்யாவின் புகழ் மற்றும் பணமீதே பெரும் ஈடுபாடு கொண்டிருந்ததால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஸ்ரீவித்யா. யாரையும் சந்திக்க விரும்பாமல் கேரளாவில் தனியாக வசித்து வந்ததாகவும் கூறினார். நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி காலத்தில் கமலை சந்திக்க விரும்பியதாகவும் கமல்ஹாசனும் அவரை சென்று சந்தித்ததாகவும் கூறியிருக்கிறார். பணம், பெயர், புகழ் என்று எல்லாமிருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் 2006 ஆம் ஆண்டு  கேரளாவில் அனாதையாக  இறந்ததாக கண்ணீர் மல்க கூறினார் குட்டி பத்மினி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The shocking incident of the actress who fell in love with kamal hasan and died as an orphan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->