சூர்யா விஜய் சேதுபதியின் "பீனிக்ஸ்"  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு..! 
                                    
                                    
                                   The release date of Surya Vijay Sethupathi Phoenix has been announced
 
                                 
                               
                                
                                      
                                            நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள 'பீனிக்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசுவும் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
 ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாடலான 'யாராண்ட' பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது. 'பீனிக்ஸ்' திரைப்படம் முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 'பீனிக்ஸ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் எதிர்வரும் ஜூலை 04-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       The release date of Surya Vijay Sethupathi Phoenix has been announced