ஷாலினிக்கு திருமணத்தில் கொடுத்த வாக்கை இன்னமும், காப்பாற்றி வரும் தல.! என்ன வாக்கு தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் அதிகப்படியான வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென்று உலகம் முழுதுமே ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக இவரது ரசிகர்களால் கொண்டாடப்படும். 

இவர் இயக்கத்தில் உருவாக்கிய அமர்க்களம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தங்களுடைய வாழ்க்கை முறையால் அனைவரையும் இவர்கள் திரும்பிப்பார்க்க வைத்து இருக்கின்றனர். மிகச்சிறந்த காதல் ஜோடிக்கு உதாரணமாக இருவரும் விளங்குகின்றனர்.

இந்த நிலையில் தனது மனைவி ஷாலினிக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொடுத்த சத்தியம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் ஒரு ஆண்டிற்கு ஒரு படத்திற்கு மட்டும்தான் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும், மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள 15 நாட்களும் குடும்பத்துடன் செலவழிக்க வேண்டும் என்பதுதான்.

அந்த சத்தியத்தை தல அஜித் தற்போது வரை காப்பாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு இவர் ஒரு படம் மட்டும்தான் நடிக்கின்றார். மீதமுள்ள நேரத்தை தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலவிட்டு உற்சாகமாக வாழ்வை நடத்தி வருகின்றார். எனவே திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்டி கொண்டிருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thala ajith promise to shalini


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->