பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இரண்டு முன்னாள் காதலர்கள் கைது.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி. இவர் மனசு மமதா, மௌனராகம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 

நடிகை ஸ்ரவானி ஹைதராபாத் மதுரா நகரில் உள்ள தனது வீட்டுக் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவராஜ் ரெட்டி என்பவர் அவரை ஆபாசமாக வீடியோ எடுத்த பணம் கேட்டு மிரட்டியதாக, ஸ்ரவானி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சீரியல் நடிகை ஸ்ரவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் , அவரது முன்னாள் காதலங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 நடிகை ஸ்ரவானி தற்கொலைக்கு அவரது மூன்று முன்னாள் காதலன்கள் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சாய் ரெட்டி என்பவருடன் ஸ்ரவானிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி நடிகையின் பெற்றோருக்கு சாய் ரெட்டி லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

அதையடுத்து 2017ம் ஆண்டு டிக் டாக் பிரபலமான தேவராஜ் ரெட்டி என்றவருடன், ஸ்ரவானி பழக்கம் ஏற்பட்டுள்ளது. தேவராஜ் ரெட்டி நடிப்புத் திறமையை கண்டு மயங்கிய அவருடன் தனிமையில் இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டுள்ளார் தேவராஜ். தேவராஜ் ஒரு கட்டத்தில் வீடியோவை காட்டி மிரட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். 

கடந்த ஆண்டு சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார் ரெட்டியை சந்தித்து உள்ளார். ஸ்ரவானியை கதாநாயகி ஆக்குவதாகவும், காதலிப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அசோக்குமார், பின்னர் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த நடிகை தற்கொலை முடிவுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது. தற்போது,  சாய் ரெட்டி, தேவராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான தயாரிப்பாளர் அசோக்குமார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

telugu serial actress sravani suicide 2 ex lover arrest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->