#BREAKING || திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் திடீர் கைது! காரணம் என்ன?
Tamil film producer Ravinder Chandrasekhar has been arrested
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமா தயாரிப்பாளர் என்று பிரபலமானதை விட பல்வேறு விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர். தற்போது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமியும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே சில மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Tamil film producer Ravinder Chandrasekhar has been arrested