'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் ட்ரெண்டிங் நடிகை.. யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாக 350 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மே ஒன்றாம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை ஒட்டி வெளியான நிலையில், தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டரில் 'விடாமுயற்சி' திரைப்படம் குறித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இன்னும் 2 வாரங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நயன்தாரா அல்லது திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தமன்னா ஜெயிலர் படத்தில் நடனமாடிய காவாலா பாடல் நல்ல வரவேற்பை பெற்றதால் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, நடிகை தமன்னா வீரம் படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamanna pair with Ajith in vidamuyarchi movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->