புது படத்தில் கமிட் ஆக முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. பாவமே.. இப்படி ஒரு காரணமா.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்கள் அதிகமாக குடும்ப சென்டிமென்ட் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். எனவே இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். 

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 21 வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் திரை நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய தாடி மற்றும் முடியுடன் ஒரு புதுவிதமான கெட்டப்பில் வலம் வருகின்றார். தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது. இதனால் வேறு படங்களில் சிவகார்த்திகேயன் கமிட் ஆகலாம் என்று நினைத்தாலும் அவரது தாடியும் முடியும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. வேல் படங்களில் கமிட் ஆக முடியாத அளவிற்கு இந்த பட தோற்றம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in delecate Position In Committing new Movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->