#வீடியோ: ஷகிலா ட்ரைலர்.. வெறும் ட்ரெயிலர் இப்படின்னா., படம் எப்படி இருக்குமோ.?!
shakeela trailer viral
பிரபல நடிகை ஷகிலாவுடைய பயோபிக் ஷகிலா என்ற பெயரில் பாலிவுட்டில் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
நடிகை சகிலா பி கிரேட் படங்களின் மூலமாக பிரபலமானவர். ஒரு காலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் இவர் நடித்த படங்கள் கொடிகட்டிப் பறந்தன. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் அவர் நிறைய படங்கள் நடித்து அவரது விருதைப் பெற்றுள்ளார்.

இருப்பினும், ஒரு கட்டத்தில் அது போன்ற படங்களில் இருந்து விலகி ஷகிலா நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது, பாலிவுட்டில் ஷகிலாவின் படத்தை ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து இருக்கின்றனர்.
இதில் ஷகிலாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சத்தா நடித்து இருக்கின்றார். இந்த படமானது இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் ஷகிலா ட்ரைலர் என்ற ஹாஷ்டேக் டிரண்டாகி இருக்கிறது.