பிரபல சீரியல் நடிகை ஷிமோனா திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஷிமோனா. சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாவம் கணேசன்' தொடரில் நடித்து வந்தார். 

பின்னர், இடையிலேயே சீரியலை விட்டு விலகிய ஷிமோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த தகவலையும், திருமணம் குறித்த செய்தியையும் ரசிகர்களுக்கு அறிவித்தார்.

இந்த நிலையில், கோவையில் நடிகை ஷிமோனாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அவரது திருமணத்தில் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். 

மீடியாவை விட்டு விலகி இருந்தாலும் 'பாவம் கணேசன்' ப்ரியாவாக இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள நடிகை ஷிமோனாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actor shimona marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->