பிக்பாஸ் வீட்டில் நுழைந்த தளபதி நண்பர்.! இன்றைய ப்ரோமோ வெளியீடு.!
Sanjeev entry promo viral
தென்னிந்தியாவின் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன் களை கடந்து ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த 5 சீசன் களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் சீசன் 5 தற்போது பல்வேறு எலிமினேஷன் களுக்கு பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி என்று படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து கானா பாடகரான இசைவாணி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்துள்ளார்.
அவர் தொலைக்காட்சி சீரியல் நடிகர் மற்றும் திரைப்பட குணச்சித்திர நடிகருமான சஞ்சீவ். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Sanjeev entry promo viral