சாய் பல்லவிக்கு இப்படியொரு பழக்கம் உள்ளதா? வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

 அதனை தொடர்ந்து சாய்பல்லவி மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் கால்தடம் பதித்தார். மேலும் இவர் நடிப்பில் மட்டுமின்றி நடன திறமையும் கொண்டுள்ளார். 

இந்நிலையில் சாய்பல்லவி தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளிவர உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், உங்களது  கைப்பையில் வைத்திருக்கும் பொருட்கள் குறித்து கேட்டதற்கு, நான் எப்பொழுதும் எனது ஐடி மற்றும் செல்போன் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்திருப்பேன் என கூறியுள்ளார். 

மேலும் அவர் தனது பேக்கில் விபூதி பாக்கெட் ஒன்றை எப்பொழுதும் வைத்திருப்பாராம்.  ஏனெனில் அவருக்கு சிறுவயதிலிருந்தே விபூதி சாப்பிடும் பழக்கம் உள்ளதாம். அந்த பழக்கம் இப்பொழுதும் உள்ளதால் சாப்பிடுவதற்காக அவர் விபூதி பாக்கெட்டை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

   
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

saipallavi have a habit of eating vipoothi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->