ஒரே வாரத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.?! திரையுலகமே பிரம்மிப்பு.!
RRR movie one weak collection
பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம்தான். ஆர்.ஆர்.ஆர் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகியது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகின்ற இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழி மாற்றம் செய்யப்படாமல் நேரடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கிலேயே வெளியாகியது.
பாகுபலி படம் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகியது.
இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ஒருவாரம் ஆகிய நிலையில் படம் ரூ.710 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
RRR movie one weak collection