பட்டையை கிளப்பும் "காந்தாரா 2 " - பட்ஜெட்டை உயர்த்திய ரிஷப் ஷெட்டி.!
rishap shetti increase kanthaara 2 budget
பட்டையை கிளப்பும் "காந்தாரா 2 " - பட்ஜெட்டை உயர்த்திய ரிஷப் ஷெட்டி.!
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா'. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.
இதையடுத்து, இந்தப் படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில், ‘காந்தாரா 2’ படத்தை ரிஷப்ஷெட்டி கையில் எடுத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் கி.பி. 301 - கி.பி.400 காலகட்டத்தில் நடப்பது போன்று உருவாகிறது. மேலும், இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்று ரிஷப் ஷெட்டி படத்தின் பட்ஜெட்டை 125 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
rishap shetti increase kanthaara 2 budget