அப்ப எனக்கு 16 வயசு., கமல் அப்படி பண்ணுவாருனு நினைச்சி கூட பாக்கல.- ரேகா ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


1986 ஆம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேகா பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் ஜெனிஃபர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து பாலசந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படத்தில் கமலுக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது குறித்து நடிகை ரேகாவின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்ட போது, "புன்னகை மன்னன் படம் கிளைமேக்ஸ் காட்சியில் என்னிடம் சொல்லாமலே சில விஷயங்களை செய்து விட்டனர். 

இருவரும் மலை உச்சியில் நின்று கொண்டிருக்கும் பொழுது, ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லி முடிப்பதற்குள் கமல் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டார். எனக்கு அது அதிர்ச்சியை கொடுத்தது, இதையெல்லாம் என் அப்பா பார்த்தால் அவ்வளவு தான் என்று நான் கூறியதற்கு இயக்குனர் பாலச்சந்தர் இது ஒன்றும் அசிங்கமாகத் தெரியாது காதலின் வெளிப்பாடாக இருக்கும் என்று எனை என்னை சமாதானப்படுத்தினார். 

என்னுடைய தாயிடம் இதுகுறித்து கூறி நான் புலம்பினேன். படம் வெளியான பொழுது எனது பெற்றோர் இது குறித்து என்னிடம் கடிந்து கொண்டனர். இதுபற்றி இப்பொழுது நான் கூறுவதால் கமலுக்கு என் மேல் கோபம் ஏற்படலாம், ஆனால் உண்மையை தெரிவித்து தானே ஆக வேண்டும்." என்று அவர் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rekha open talk about punnagai mannan movie climax


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->