ரஷ்மிகாவை விட க்யூட்.. ரஞ்சிதமே பாடலுக்கு இணையத்தை கலக்கும் நடனம் ஆடிய குட்டி பெண்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' எனத் தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியது. 

ஏற்கெனவே, வெளியான 'உளவாளி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மொச்சைக் கெட்ட பல்லழகி' எனும் பாடலின் காப்பி என்று மீம்ஸ்கள் பல வெளிவந்தன. ஆனால், இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், இந்த பாடலுக்கு ரீலிஸ் செய்து வீடியோ வெளியிடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறுமி ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி இருக்கின்றார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ranjidhame school girl dance video viral 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->