நடிகை ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா.?! நெட்டிசன்களை வியக்கவைத்த புகைப்படம்.!
Rambha daughter recent Photo viral
90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடையழகி என்ற பட்டம் இருக்கிறது. கார்த்திக், அஜித், விஜய், விஜயகாந்த் என்று நிறைய முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கனட நாட்டிலேயே அவர் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

நடிகை ரம்பா திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு இப்பொழுதும் அதிக ரசிகர் கூட்டம் இருக்கும். நடிகை ரம்பாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இத்தகைய சூழலில் தற்போது ரம்பாவின் மகளுடைய புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதை கண்ட ரசிகர்கள் ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
English Summary
Rambha daughter recent Photo viral