"ரஜினி இல்லை என்றால், அஜித் சினிமா துறையில் இருந்திருக்கவே வாய்ப்பு இல்லை".!
rajni film success leads ajith kumar career in film industry
தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினி. நாற்பது வருடங்களுக்கு மேலாக முடி சூடா மன்னனாக விளங்கி வரும் இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து தனது மகள் இயக்கும் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ஏராளமான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சூப்பர் ஸ்டாரின் படைத்தால் பலம் அடைந்திருக்கிறார்கள். பல தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களுக்கு தனது படம் தயாரிக்கும் வாய்ப்பினை கொடுத்து அவள்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் சூப்பர் ஸ்டார். 27 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் ஒன்று தல அஜித் குமாரின் வெற்றியை நிர்ணயித்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த செய்தியை பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவசக்தி பாண்டியன் திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர். இவர் அந்த காலகட்டத்தில் தன் கையிலிருக்கும் பணத்தை வைத்து வான்மதி என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் ஹீரோவாக அஜித் குமார் நடித்திருந்தார். பணம் இல்லாத காரணத்தால் சிறிது நாட்கள் அந்த படத்தின் சூட்டிங்கானது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த முத்து திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கான தியேட்டர் விநியோக உரிமைகளை வாங்கியிருந்த சிவசக்தி பாண்டியனுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. அந்த லாபத்தை வைத்து வான்மதி திரைப்படத்தை முழுவதுமாக தயாரித்தார்.

அகத்தியன் இயக்கத்தில் உருவான வான்மதி மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்து அஜித் குமாரின் கேரியரில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் சிவசக்தி பாண்டியன் மற்றும் அகத்தியன் கூட்டணியில் உருவான காதல் கோட்டை என்ற திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் ஒன்றாக அமைந்தது. இவ்வாறு ரஜினியின் முத்து படம் மறைமுகமாக அஜித்தின் வெற்றிக்கு உதவி இருக்கும் செய்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி வைரலாகி வருகிறது.
English Summary
rajni film success leads ajith kumar career in film industry