உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினி.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி உலக அளவில் இதுவரை மொத்தமாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இமயமலை பயணத்தை தொடர்ந்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார், அப்போது பேசிய அவர், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நாளை ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் ஜெயிலர் படம் வசூல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், இவை அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth watch jailor movie with UP cm


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->