எல்லாமே அதிசயம்.. அவரே நினைத்து பார்த்திருப்பாரா?..! அரசியல் பேசி முற்றுப்புள்ளி.. காரணம் என்ன?..!! - Seithipunal
Seithipunal


நடிகர் கமலஹாசன் தனது 60 வருட திரைவாழ்க்கையை தற்போது நிறைவு செய்துள்ளார். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக "உங்கள் நான்" என்ற நிகழ்ச்சியானது சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டது. 

திட்டமிட்டபடியே துவங்கிய நிகழ்ச்சியில் திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரபலங்கள்., ரசிகர்கள் பட்டாளம் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்.,  இளையராஜா., ஏ.ஆர்.ரகுமான்,, எஸ்.ஏ.சந்திர சேகர் போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

நேற்றைய தினத்தில் ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து வைரலாகிக்கொண்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில்., ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பேசினார். 

rajinikanth, rajni with kamal, rajinikanth with kamal,

நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில் " கமல் எனும் கலைஞன் அற்புதமானவர். கமலிருக்கும் எனக்கும் உள்ள நட்பு உயிரோட்டமானது. இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம் - அற்புதம் நிறைந்தவை.. அனைத்தும் எதிர்பார்த்த வேளையில் நடக்கும் போது அது அற்புதம்.. 

தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.. கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் தான் முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன்., மக்களுக்கான பணிகளை செய்வேன் என்று... அதிசயம் அங்கே நிகழ்ந்தது.. 

rajinikanth, superstar rajinikanth,

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதிவியேற்றதும் இப்போது ஆட்சி கவிழ்ந்து விடும். வரும் ஒரு வாரம் தான்.. 10 நாட்கள் தான்.. 1 மாதம் தான்.. அதிகபட்சம் 4 மாதங்கள் தான் என்று 99 விழுக்காடு அளவிற்கு பேசிக்கொண்டு இருந்தனர். 

அனைத்து தடைகளையும் மீறி மக்களுக்கான பணியை முனைப்புடன் செய்து கொண்டு வருகிறார்.. எல்லாம் அதிசயதால் தான்.. தமிழக அரசியலில் நேற்றும்.. இன்றும்... நாளையும் அதிசயம் நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பேச்சை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் திகைத்துப்போனது தான் அரங்கத்தில் நடந்தது. இது குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth speech about edapadi palanisamy govt Miracle


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal