'லியோ' படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து!
Rajinikanth comment Leo film
நடிகர் ரஜினிகாந்த், விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'லியோ' படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கன்னியாகுமரி பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படபிடிப்பில் கலந்து கொண்டு விட்டு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை செல்வதற்காக கன்னியாகுமாரியில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று சென்றார்.

அங்கு அவருக்கு ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ''கடந்த 1977 ஆம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி படபிடிப்புக்காக தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கிறேன்.

அதன் பிறகு இப்போது தான் படப்பிடிப்பிற்காக வருகிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். ஆனால் அவர்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
English Summary
Rajinikanth comment Leo film