முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. காமெடி நடிகரின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி, கமல்.! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளிவில் 75-வது இடம் பெற்றுள்ளார்.

இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. ஹரியானா மாநிலத்தினை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் கணேஷ்குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்ருதன் ஜெய் கூறியதவாது, தான் வாழ்க்கையில் என்னாவாக வேண்டுமென தனக்கு பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாகவும், கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

முதல் முயற்சியிலேயே தேர்ச்சிவில் வெற்றி பெற்ற ஸ்ருதன் ஜெய்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன், தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தானும் பெருமைப்படுவதாக கூறியுள்ள ரஜினி, கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்தால் நேரடியாக வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் என்று தெரிவித்தாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini kamal wishes chinni jayanth


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal