ரஜினியின் 'ஜெயிலர்' படத்துக்கு இலவச டிக்கெட்.. ஊழியர்களுக்கு விடுமுறை.. வெளியான அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று பணியாளர்களுக்கு மதுரையை சேர்ந்த Uno Aqua Care என்ற நிறுவனம் விடுமுறை அளித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தங்களது ஊழியர்களுக்கு இலவச டிக்கெட் உடன் விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் எங்கள் தாத்தா அப்பா எங்கள் தலைமுறை எங்கள் மகன் மற்றும் பேரன் என்று எல்லோருக்கும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த விடுமுறையானது தங்களின் அனைத்து கிளைகளுக்கும் உட்படும் என்றும் 'வாழ்க ரஜினிகாந்த்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private company announced free ticket and holiday for jailor movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->