அந்த 5-வது படம் பொன்னியின் செல்வன் 2 தானாம்.. இப்போதே மக்கள் போட்ட கணக்கு.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நான்கு திரைப்படங்கள் மட்டும் தான் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையை புரிந்துள்ளது. இந்த சாதனையை முதல் முதலில் செய்தது பிரபல பாலிவுட் அமீர்கான் நடிப்பில் வெளியாகிய தங்கல் என்ற பாலிவுட் படம் தான்.

தங்கல் திரைப்படத்திற்கு பின் தெலுங்கு திரைப்படமான பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. அடுத்தது யஷ் நடித்த கன்னட திரைப்படமான கே ஜி எஃப் இரண்டாம் பாகம் இந்த ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தது.

இந்த மூன்று திரைப்படங்களை தொடர்ந்து கடைசியாக RRR திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அடுத்ததாக இந்த சாதனையை செய்ய போகும் படம் எது என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. 

பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று திரைப்படம் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை இந்நிலையில் அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 இந்த சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin selvan may Crossed 1000 crores


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal