கபாலி பொன்னம்பலம் கேட்டதால்.. அஜித்குமார் செய்த தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல வருடங்கள் வில்லனாக நடித்து வருபவர் பொன்னம்பலம். இவர் தமிழின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும்  வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது  உடல்நிலை சரியில்லாமல் இருந்து குணமாகி வரும் பொன்னம்பலம் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் தல அஜித் குமாருடன்  தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் பற்றி விவரிக்கிறார் பொன்னம்பலம். சரண் இயக்கத்தில் அஜித் மற்றும் ஷாலினி நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் பொன்னம்பலமும் நடித்திருக்கிறார் அப்போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியான சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

பொன்னம்பலத்தின் நண்பர் ஒருவரின் மகனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவரை ஆலோசித்த போது அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார். அவரது  நண்பன்  மகனின் அறுவை சிகிச்சைக்காக அஜித்திடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அஜித் அந்த சிறுவனின் மெடிக்கல் ரிப்போர்ட் மற்றும் ஹாஸ்பிடல் பில் ஆகியவற்றைத் தனக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். பிறகு ஷூட்டிங் சென்று விட்டாராம்.

ஷூட்டிங் முடித்து வந்த அஜித்  அமைதியாக இருந்திருக்கிறார். ஒருவேளை நாம் சொன்னதை அஜித் மறந்து விட்டாரோ என நினைத்த  பொன்னம்பலம் அவரிடம் சென்று சார் ஆபரேஷனுக்கு காசு கேட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் நான் அப்பவே செட்டில் பண்ணி விட்டேன் நீங்க ஏன் இன்னும் இருக்கீங்க? என்று அஜித் இவரிடம் கேட்டிருக்கிறார். எந்த ஒரு சிறு எதிர்பார்ப்பும் இல்லாமல் அஜித் செய்த இந்த உதவியை இன்றும் நினைத்து நெகிழ்கிறார் பொன்னம்பலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ponnambalam shared the touching information that Ajith never expected to do this


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->