விமான விபத்து!'வருத்தமா இருக்கு... இனிமேல் இது மாதிரி நடக்க கூடாதுன்னு வேண்டுகிறேன்'...! - ரஜினிகாந்த்
Plane crash Im sad I pray that this doesnt happen again Rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

மேலும், இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு, இன்று காலை நடிகர் 'ரஜினிகாந்த்' வருகை தந்திருந்தார்.
ரஜினிகாந்த்:
அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது, 'விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்'என்று தெரிவித்தார்.
English Summary
Plane crash Im sad I pray that this doesnt happen again Rajinikanth