மலேசியாவில் வேண்டாம்! விஜய்யை பார்த்து செய்தது மாதிரி ஆகிவிடும்! ஜெயிலர் 2வில் ரஜினி எடுத்த முடிவு குறித்து அந்தணன் ஓபன் டாக்!
Not in Malaysia It would end up just like what happened with Vijay Anthanan speaks candidly about the decision Rajini made regarding Jailer 2
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்த தகவல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.
அண்மையில், 'ஜெயிலர் 2' இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த சன் பிக்சர்ஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்காக தொழிலதிபர் டத்தோ மாலிக் ரஜினிகாந்தை நேரில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் அந்தணன், இந்த விவகாரம் குறித்து தனது தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'ஜெயிலர் 2' இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்காக டத்தோ மாலிக், ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், "ஏற்கனவே விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றுள்ளது. தற்போது நானும் அங்கே நிகழ்ச்சியை நடத்தினால் அது போட்டியாக பார்க்கப்படும். அதை நான் விரும்பவில்லை" என்று ரஜினிகாந்த் தனது விருப்பத்தை தெரிவித்ததாக அந்தணன் கூறியுள்ளார்.இதன் காரணமாக, மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலானவை மட்டுமே. 'ஜெயிலர் 2' இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் அல்லது அதுகுறித்த காரணங்கள் குறித்து ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் அல்லது படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே, இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறும் என்பது குறித்து படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
English Summary
Not in Malaysia It would end up just like what happened with Vijay Anthanan speaks candidly about the decision Rajini made regarding Jailer 2