இரட்டை குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கவிஞர் சினேகன்.!
name ceremony to snegan childrens
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் சினேகன். நடிகருமான இவர் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
கவிஞர் சினேகன் கடந்த 2021-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, தங்க வளையல் சூட்டியுள்ளார்.
இது குறித்து கவிஞர் சினேகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" என்ற பெயரையும் "கவிதை " என்ற பெயரையும் .. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
name ceremony to snegan childrens