வடிவேலு இஸ் பேக்.. கலக்கலான காமெடியுடன் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' ட்ரைலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர், வடிவேலு ஹீரோவாக நடிக்கின்ற திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடிகை ரெடின் கிங்ஸ்லி, ஷிவாணி நாராயணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கின்றனர்.

லைகா தயாரிப்பில் உருவாகின்ற இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ஏற்கெனவே, இந்த திரைப்படத்திலிருந்து வெளியாகிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. 

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது, நடந்து வருகின்றது. சமீபத்தில் வடிவேலு குரலில் ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது வைகைபுயல் வடிவேலுவின் கலக்கலான காமெடிகளுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nai Sekar returns trailer released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->