மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அனுமதி.! ஆனால் இதை செய்யக்கூடாது.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜுன் 23-ம் தேதி  நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலை ரத்து செய்யக்கரி ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nadikar sanga election case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal